திருப்பதியில் பக்தர்களின் வசதிக்காக ரூபாய்.95 கோடி செலவில் 5வது மண்டபம் கட்டப்படும் என அரங்காவலர் குழு தலைவர் அறிவித்து இருக்கிறார்.
கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, மீண்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கோவிலுக்கு தினசரி பக்தர்கள் வருகையானது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் தேவஸ்தானம் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திருப்பதியில் பக்தர்களின் வசதிக்காக ரூபாய்.95 கோடி செலவில் 5வது மண்டபம் கட்டப்படும் என அரங்காவலர் குழு தலைவர் அறிவித்து இருக்கிறார்.