Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே…! இனி 1 மணி நேரத்தில்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக நேரடி முறையில் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் விநியோகம் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வந்தது. மாதந்தோறும் 20ஆம் தேதி முதல் அடுத்த மாதத்திற்கான டிக்கெட் விநியோகம் தொடங்கும். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடக்கத்தில் குறைந்த அளவில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில், கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் வாயிலாக 2,50,000 பக்தர்கள் வரை அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

நெட் ஒர்க் வசதி அதிகம் கிடைக்காத இடங்களில் இருப்போர் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுவதால் விரைவில் நேரடி முறையில் டிக்கெட்டுகளை விநியோகம் செய்ய தேவஸ்தானம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதில் முதற் கட்டமாக கடந்த மாதம் முதல் இலவச தரிசன டிக்கெட் ஸ்ரீனிவாசம் விருந்தினர் மாளிகை வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம் போன்ற இடங்களில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்பின் ஐஆர்சிடிசி நிறுவனம் தன் இணையதளத்தில் அவ்வப்போது வெளியிட்டு பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது.

இதில் ஒரு டிக்கெட்டின் விலையானது 990 ரூபாய் ஆகும். டிக்கெட் தேவைப்படும் பக்தர்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் 990 ரூபாய் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இந்த இணையதளத்தில் டிக்கெட் பதிவு செய்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோயிலுக்குள் செல்லலாம். அவர்கள் 300 ரூ சிறப்பு கட்டண தரிசனத்தில் சென்று 1 மணி நேரத்தில் சாமியை தரிசனம் செய்து விட்டு வரலாம். அவ்வாறு தரிசனம் செய்துவிட்டு திரும்பிய பக்தர்களுக்கு டிக்கெட்டுக்கு உரிய லட்டு பிரசாதம் ஒன்றை நிறுவனம் வழங்கும் எனவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |