திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு பக்தர்கள் வழக்கம்போல சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதனிடையே ஒவ்வொரு மாதமும் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் ஒரு மாதத்திற்கு முன்னரே ஆன்லைனில் வெளியிடப்பட்ட கையில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நவம்பர் மாதம் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. ஒருநாளைக்கு ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. முன்பதிவு செய்தவர்கள் தினம் தோறும் மதியம் 3 மணிக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இலவச தரிசனம் சிறப்பு டிக்கெட்டுகளை tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.