திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கான இடைவேளை தரிசன நேரம் மாற்றப்படுவதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை இன்று முதல் நன்கொடையாளர்களுக்கான கவுண்டரை திறந்து உள்ளது.
டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் திருமலை திருப்பதி கோவிலில் இடைவேளை தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காத்திருக்கும் பக்தர்கள் காலையில் விரைவு தரிசனம் செய்யும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பக்தர்கள் தினமும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வந்து இடைவேளை தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.