திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளதால் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புதிய கவுண்டர் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதாவது கோவில் சார்பாக ஸ்ரீவாணி என்று அறக்கட்டளை ஒன்றை இயங்கி வருகிறது. அதன் கீழ் பெறப்படும் விதிகளை வைத்து சிறிய கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
அதே சமயம் புதிய கோவில்களும் கட்டப்படுகிறது. தற்போது ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்குபவர்கள் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கப்படுகிறது. அவர்கள் மூலவர் சிலைக்கு 10 அடி தொலைவில் நின்று சாமி தரிசனம் செய்ய முடியும். இந்த வசதியை பெறுவதற்கு பக்தரிடம் 500 ரூபாய் பெறப்பட்டு அவர் விரும்பும் நாளில் தரிசிக்க விஐபி பிரேக் டிக்கெட் வழங்கப்படுகிறது. இதுவரை ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்ட இந்த டிக்கெட்டை இனி நேரடியாக திருப்பதியில் வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதற்கு திருப்பதி மாதமும் பக்தர்கள் ஓய்வறையில் புதிய கவுண்டர் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.