திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் வைத்து எந்தவித டிக்கெட்டுகளும் வழங்கப்படாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. முன்பே ஆன்லைன் மூலம் 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம், இலவச தரிசன டிக்கெட்டுகள் மற்றும் கல்யாண உற்சவத்தில் தரிசன டிக்கெட் என அனைத்தும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பதியில் எந்த விதமான டிக்கெட்டுகளும் பக்தர்களுக்கு வழங்கப்படாது.
ஜனவரி 13-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியை சேர்ந்த பக்தர்களுக்கும், திருப்பதி ஆதார் முகவரி கொண்டவர்களுக்கு மட்டும் தினசரி 5 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும். ஆகவே வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை பெற வர வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.