திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதத்துக்கான தரிசனம் டிக்கெட்டுகள் இன்றும், இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளையும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதற்கிடையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்களின் எண்ணிக்கையானது தினசரி அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதியை நோக்கி பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்த மாதம் சுவாமியை தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் தொடர்பான அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி தினசரி 20,000 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் 10, 000 இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. அடுத்த மாதத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்க இருக்கிறது .
இது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பதி கோவிலில் அடுத்த மாதம் சுவாமியை தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசனம் டிக்கெட்டு தினசரி 20, 000 வீதம் என்று ஜனவரி 28ஆம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட இருக்கிறது . அதன்பின் இலவச தரிசனத்துக்காக நாள்தோறும் 10,000 டிக்கெட் 29ஆஆம் தேதி( நாளை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட இருக்கிறது. ஆகவே அடுத்த மாதத்திற்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login எனும் இணைய வழியில் பக்தர்கள் முன் பதிவு செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.