தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு நாளைக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் மேற்கொள்கின்றனர். இதையடுத்து திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்ய தேவஸ்தானம் சார்பில் 300 தரிசன டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான 300 தரிசனம் டிக்கெட்கள் இன்று காலை 9 மணியளவில் வெளியிடப்படுகிறது.
பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் மட்டுமே தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.