திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான அர்ஜித சேவை டிக்கெட்டுகளை இன்று(16.11.22) காலை 10 மணி முதல் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
டிக்கெட்டுகளை பக்தர்கள் tirupatibalaji.ap.gov.in எனும் இணையதளத்தில் பதிவு செய்யலாம். கல்யாணோத்சவம், அர்ஜித பிரம்மோற்சவம். ஊஞ்சல் சேவை, சஹஸ்ர தீபாலன்கார சேவைகளில் பங்கேற்க டிக்கெட்டுகள் கிடைக்கும்.