திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திரா மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள், மத்திய-மாநில அமைச்சர்கள், கவர்னர்கள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக முக்கிய பிரமுகர்கள் அதிகாலை 5 மணி முதல் 8 மணிவரை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் விஐபி பிரேக் தரிசன நேரத்தை மாற்ற திருப்பதி தேவஸ்தானமானது முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் இன்று முதல் காலை 8 -10 மணி வரை பிரேக் தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க நேரம் மாற்றப்பட்டது. அந்நேரத்தில் இன்று வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் மேற்கொண்டனர்.