Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…. வரும் 10ஆம் தேதி வரை சூப்பர் சான்ஸ்…!!!

மழை, வெள்ள பாதிப்புகள் காரணமாக ஏழுமலையானை தரிசிக்க முடியாத பக்தர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தேவஸ்தானம் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பாதைகள் முழுவதும் சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் மண் சரிவு, பாறைகள் உருண்டு விழுந்து சாலை முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருந்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பலரால் திருமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய முடியவில்லை.

அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி மழை வெள்ளம் மண்சரிவு காரணமாக நவம்பர் 18ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை தரிசனம் டோக்கன்கள் இருந்தும் சாமிதரிசனம் செய்யாத பக்தர்கள் அந்த டோக்கன்கள் மூலம் அடுத்த மூன்று மாத காலத்திற்குள் தரிசனம் செய்து கொள்ளலாம்.  இலவச தரிசன டோக்கன், 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஆகியவற்றை தேவஸ்தான இணையதளம் மூலம் வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது. இது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான அறிக்கை விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |