Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஆந்திர மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற சுவாமி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி கோயிலுக்கு வழக்கம்போல் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம் வரும் 17 ஆம் தேதியன்று துவங்கப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு நாளை மறுநாள் கோயில் முழுதும் சுத்தம் மேற்கொள்ள ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இருப்பதாவது “திருப்பதி கோயில் முழுதும் சுத்தம் செய்வதற்காக வரும் 12 ஆம் தேதியன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற இருக்கிறது. இதனால் அன்று காலை 6 -10 மணி ரை கோயில் முழுதும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறவுள்ளது. அவ்வாறு சுத்தம் செய்யும் பணிகள் முடிவடைந்ததும் சிறப்புபூஜை செய்யப்படும். அதன்பின் 11 மணிக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ஆகவே நாளை மறுநாள் 5 மணி நேரத்திற்கு அனைத்து பக்தர்களுக்கும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின் 12 ஆம் தேதி காலை 11 மணிக்கு பின் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அன்றையதினம் விஐபி தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்து இருக்கிறது. அதுமட்டுமின்றி 11 ஆம் தேதியன்று விஐபி தரிசனம் மேற்கொள்ள எவ்வித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது” எனவும் தேவஸ்தானம் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Categories

Tech |