Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு!…. இன்று அங்கப்பிரதட்சண டோக்கன் வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தானம் சார்பாக ரூபாய்.300 தரிசன கட்டண டிக்கெட் ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று(நவ..25) ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் “திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அங்கப் பிரதட்சண டோக்கன் இன்று காலை 10 மணி அளவில் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதனை பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் அங்கப்பிரதட்சண டோக்கன் முன் பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்துகொள்ளலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |