திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் நேற்று 3 மணி நேரம் மட்டுமே காத்திருக்க வேண்டி இருந்தது. திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு நேற்று காலை நிலவரப்படி காத்திருப்பு அறைகளில் காத்திருக்காமல் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தர்ம தரிசனத்துக்கு 3 மணிநேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே பக்தர்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.
அதுமட்டுமின்றி காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசனம் வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் ஆகியவை வழங்கப்படுகிறது. நேற்று முன் தினம் மட்டும் 64 ஆயிரத்து 586 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திருப்பதியிலுள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் சீனிவாசம் கோவிந்தரா சுவாமி சத்திரம் உள்ளிட்ட இடங்களில் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.