திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாத ஆர்ஜித சேவைக்கான டிக்கெட் டிச.,12 மதியம் 3 மணிக்கு தேவஸ்தான ணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை சேவைகளுக்கு டிச.. 12 காலை 10 மணி – டிச., 14 காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். டிச., 14 மதியம் 2 மணிக்கு குலுக்கல் நடைபெறும். குலுக்கலில் தேர்வாகும் பக்தர்களுக்கு எஸ்எம்எஸ், இ-மெயில் மூலம் தகவல் அனுப்பப்படும்.