Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருப்பதி பிரம்மோற்சவ விழா… சுவாமி தரிசன முன்பதிவு தொடக்கம்…!!!

திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாட்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வருகின்ற 19ஆம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி வருகின்ற 15ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற இருக்கிறது. இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் தற்போது வரை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை நான்கு மணிக்கே தேவஸ்தான இணையதள முகவரி யான http:/ttdsevaonlinr.com டிக்கெட் முன்பதிவு செய்யும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் பிரம்மோற்சவம் நடைபெற கூடிய நாட்களில் சுவாமி வீதிஉலா நடைபெறுவது வரலாற்றில் முதல் முறையாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ரங்கநாதர் மண்டபத்தில் பிரம்மோற்சவத்தின் போது சுவாமி எந்தெந்த வாகனங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்களோ? அந்த வாகனங்கள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. திருப்பதியில் நேற்று முன்தினம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அதனால் கடந்த 5 மாதங்களுக்கு பின்னர் ஒரு கோடி ரூபாயை உண்டியலில் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |