திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜன.1 முதல் 11ம்தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 11 நாட்களும் ஒரு நாளைக்கு 20,000 டிக்கெட் என இரண்டு லட்சத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியானது அதோடு ரூ.300-க்கான சிறப்பு தரிசன நுழைவு டிக்கெட் வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி திருப்பதியில் 9 இடங்களில் வைகுண்ட ஏகாதசிக்கான 10 நாட்களுக்கான இலவச நேரம் ஒதுக்கீடு டிக்கெட் வரும் 1ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் (அ) கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டது. இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்த திருப்பதி தேவஸ்தானம், பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு வரலாம் என்று கூறியுள்ளது.