Categories
தேசிய செய்திகள்

திருப்பதி வைகுண்ட ஏகதேசி…. இன்று 5 மணி நேரம் சேவை ரத்து…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு நுழைவு சிறப்பு தரிசனத்திற்கான முன்பதிவு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. திருமலையில் உள்ள வைகுண்ட நுழைவு வாயில் ஜனவரி 2 முதல் 11ஆம் தேதி வரை திறந்திருக்கும். நாடொன்றுக்கு 2000 பேர் என மொத்தம் 20 ஆயிரம் பக்தர்கள் இந்த வைகுண்ட நுழைவு வாயிலில் அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி யை முன்னிட்டு சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்படும்.

இதற்காக இன்று டிசம்பர் 27ஆம் தேதி கோவிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனால் அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மூலவர் மீது பட்டு துணியால் மூடப்படும். அன்று 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டு காலை 11 மணிக்கு மேல் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |