Categories
தேசிய செய்திகள்

திருப்பதி வைகுண்ட ஏகாதேசி…. பக்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி வழிபாட்டிற்கு ஜனவரி 2ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்கும் தினம் தோறும் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் என இரண்டு லட்சம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றது. இதற்கு கட்டணம் ரூ. 300 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ஜனவரி 1 முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு தரிசனம் செய்ய முன்பதிவு செய்வோருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை தரிசனத்திற்கு வரும்போது காண்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |