Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு… சீறிபாய்ந்த காளைகள்… 5 பேர் காயம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வெள்ளாளக்கருப்பர் கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே வெள்ளாளக்கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மாதம் இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இந்த வருடமும் அதே போல புதூர் கிராமத்தினர் மஞ்சுவிரட்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். மேடை அமைத்தல், கழிப்பறை அமைத்தல், அதிகாரிகள் அமர்வதற்கான மேடை அமைத்தல் உள்ளிட்ட பல ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாசி மாதம் இறுதியில் நடைபெறும் மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டுக்கு அனைத்து துறை அதிகாரிகளும் அனுமதி அளித்துள்ளனர்.

ஆனால் மாவட்ட நிர்வாகம் இதற்கான உரிய பாதுகாப்பு வழங்க இயலாது என்று கிராமத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதையடுத்து கிராம மக்கள் சார்பில் நேற்று மஞ்சுவிரட்டு நடத்தப்படவில்லை. திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நேற்று காலை 11 மணியளவில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் வயல் பகுதியில் அவிழ்த்து விடப்பட்டன. இதில் ஏராளமான வாலிபர்கள் கலந்துகொண்டு காளைகளை பிடித்தனர். அதில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆவலுடன் அடக்க முயன்றனர். இதில் மாடு முட்டி 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த மஞ்சுவிரட்டை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

Categories

Tech |