கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் குற்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் கம்மியம்பேட்டை சாலை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது 2 திருநங்கைகள் அந்த வாலிபரை வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனை அடுத்து அந்த வாலிபரிடமிருந்த செல்போனை பறித்த போது அவர் சத்தம் போட்டும் பொதுமக்கள் கண்டும் காணாமல் சென்று விட்டனர். இதற்கிடையில் திருநங்கைகள் வாலிபரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட வாலிபர் புகார் கொடுக்க முன் வரவில்லை. இதனால் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.