Categories
தேனி மாவட்ட செய்திகள்

திருப்பி அனுப்பப்படும் சுற்றுலா பயணிகள்… வனத்துறையினர் கண்காணிப்பு… மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை…!!

மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே சின்ன சுருளி என அழைக்கப்படும் மேகமலை அருவி உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் இந்த அருவிக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வந்துள்ளனர்.

தற்போது கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை தினத்தையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் மேகமலை அருவி படையெடுத்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதற்கிடையே சிலர் வனத்துறையினரின் தடையை மீறி மலைப்பகுதி வழியாக மேகமலை அருவிக்கு சென்று குளித்து வருகின்றனர். இதனையடுத்து மலைபகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்களுக்கு அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. மேலும் தேனி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மேகமலை அருவியிலும் அனுமதி அளிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |