காய்கறி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன்சத்திரம் காவிரி நகர் 4-வது வீதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கமலா என்ற மனைவி உள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மனோகரன் இறந்துவிட்டதால் கமலா தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இதில் கமலாவின் மகனான மோகன் ராஜ் என்பவர் சரக்கு ஆட்டோவில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் சரியாக வியாபாரம் செய்ய முடியாமல் மோகன்ராஜ் சிரமப்பட்டு வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல் இருந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த மோகன்ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக மோகன்ராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மோகன்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.