Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சௌந்தரநாயகி அம்மன் கோவில்… மாசி திருவிழா… கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சௌந்தரநாயகி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் சிறப்பு வாய்ந்த புஷ்பவனேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அருணகிரிநாதர், அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர்களால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்தின் கீழ் இந்த கோவில் உள்ளது. சிவபெருமானுடைய 64 திருவிளையாடல்களில் 36-வது திருவிளையாடல் இந்த கோவிலில் நடைபெற்றது. இந்த கோவிலில் வருடம்தோறும் 11 நாட்கள் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான பங்குனி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. அதன் பின் கொடிமரத்திற்கு பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது.

இந்த கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பங்குனி திருவிழாவையொட்டி சுவாமி-அம்பாள் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் வருகின்ற 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்டு தனித்தனி தேரில் வீதி உலா வருவது பழக்கம். இந்த விழாவிற்கான முன்னேற்பாடுகளை கோவில் சூப்பிரண்டு செந்தில்குமார், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Categories

Tech |