திருப்பூரில் உள்ள சேவூர் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேவூரில் நேற்று காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. பின் காலை 8 மணி முதல் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
இந்த மழையானது மாலை வரை நீடித்தது. மேலும் சேவூர், ராமியம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், முறியாண்டம்பாளையம், கானூர், பாப்பாங்குளம், போத்தம்பாளையம், புஞ்சை தாமரைக்குளம், ஆலத்தூர், பொங்கலூர், வேட்டுவபாளையம், கருமாபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி இருந்தார்கள். இதனால் சாலைகளில் இருசக்கர வாகனங்கள் இன்றி வெறிச்சோடி இருந்தது.