Categories
சற்றுமுன் திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் கடைகளும் நேரக்கட்டுப்பாடு … வணிகர்கள் அதிரடி முடிவு ..!!

கொரோனா அச்சம் திருப்பூர் மாவட்டத்தில் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுவருகின்றது. குறிப்பாக தலைநகர் சென்னை, அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல மதுரை மாவட்டத்தில் சில பகுதியில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தின் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை திருப்பூர் மாவட்டத்தின் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு,  அனைத்து சங்கங்களின் சார்பாக ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பர்னிச்சர் சங்கங்கள், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கங்கள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தில் நாளை முதல் ஜூலை ஒன்றாம் தேதி வரை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திருப்பூரில் வணிக நிறுவனங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது .

கொரோனா நோய்களை தடுக்கும் விதமாகவும்,  வேலை செய்யும் ஊழியர்களின் குடும்பத்தின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |