Categories
உலக செய்திகள்

திருப்பூரில் திக் திக்!!…. சாக்கு முட்டையில் இருந்து மண்டை ஓடுகள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சாக்குப்பைக்குள் மனிதனின் மண்டை ஓடுகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த ஊதியூர் தாராபுரம் ரோட்டில் இச்சப்பட்டி பகுதியில் காற்றாலைகள் அமைந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இல்லாத இந்த பகுதியில் நேற்று காலை 2 சாக்கு பைகள் கிடந்துள்ளது. அதில் மனிதனின்  மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக்கூடுகள் கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்த ஊதியூர் போலீசார்  அவற்றை கைப்பற்றியுள்ளனர். மேலும் இவை எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? யார் கொண்டு வந்து வீசி சென்றுள்ளனர் என எந்த விவரமும் தெரியவில்லை. கொலை போன்ற சம்பவம் நடந்து சடலங்களை மறைக்க கொண்டு வந்து வீசப்பட்டதா? அல்லது பில்லி சூனியம் போன்றவற்றில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தியதா  என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது.

இது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் அதே பகுதிக்கு அருகில் உள்ள ரத்தக்காடையூரில் கீழ்பவானி பாசன வாய்க்காலில் கடந்த மாதம் ஒரு மனித எலும்புக்கூடு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல கருக்கம்பாளையம் பிரிவில் வீட்டுமனை பிரிவில் இருந்த மேல்நிலைத் தொட்டியில் இருந்து மனித எலும்புக்கூடு ஒன்றும் விலங்கு வேட்டைக்கு பயன்படுத்தப்படும் சுருக்கு கம்பிகளும் கிடந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் காங்கயம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |