போதை சாக்லேட் விற்பனையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களும் அதைச் சார்ந்த தொழில்களும் நடந்து வருகின்றது. இது போலவே அவிநாசி வட்டாரத்திற்குட்பட்ட தெக்கலூர், சேவூர், நம்பியாம்பாளையம், வேலாயுதம்பாளையம், பழங்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது.
இந்த நிறுவனங்களில் ஒடிசா, ராஜஸ்தான், பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து பல ஆயிரம் கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள் இவர்களில் பலர் போதைப் பழக்கத்திற்கும் குடிப்பழக்கத்திற்கும் அடிமைகளாக இருக்கின்றனர். இதனால் பிற மாநிலங்களில் இருந்து போதை சாக்லேட் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. எனவே இதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.