Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூரில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு வாலிபால்”….. வெற்றி பெற்றவர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார்….!!!!!

திருப்பூரில் பொதுமக்கள் போலீஸ் நல் உறவு வாலிபால் விளையாட்டு போட்டி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் போலீஸ் நல்வரவு வாலிபால் விளையாட்டு போட்டியானது நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியை போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு தொடங்கி வைக்க தாராபுரம், குண்டடம், அலங்கியம், மூலனூர் உள்ளிட்ட காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு வாலிபால் விளையாடினார்கள்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார். இதில் போலீசார் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |