Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் மின்தடையால் இரண்டு நோயாளிகள் மரணம்?

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடையால் ஆக்சிஜன் தடைபட்டு இரண்டு நோயாளிகள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தினர்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு உடல் பாதிப்பு காரணமாக சுமர் 300க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் அங்கேயே  சிகிச்சை பெற்று வந்தார்கள் . இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் பல்வேறு உடல் உபாதைகளுடன்  ஆக்ஸிஜன் உதவியுடன்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் , இன்று காலை  10 மணிக்கு மின்தடை ஏற்பட்டதால் கௌதம் என்ற நபரும் யசோதா என்ற பெண்மணி இருவரும் அடுத்தடுத்து இறந்துவிட்டதாக  உறவினர்கள் குற்றம்  சுமத்தினார்கள் .  இது குறித்து மருத்துவமனை முதல்வர் வள்ளி விளக்குவதாவது ,பல்வேறு நோய்களுடன்  அரசு தலைமை மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மின்தடை ஏற்பட்டிருந்தாலும் அவர்களுக்கு ஆக்ஸிஜென் வினியோகத்தில் எந்த விதமான சிக்கலும் ஏற்படவில்லை. அவர்கள் உடல் நலிவுற்றதன் காரணமாகத்தான்  இருவரும் உயிரிழந்ததாக கூறினார் .

 

 

 

Categories

Tech |