திருப்பூர் மாவட்டத்தில் மூத்தோர்களுக்கான தடகளப் போட்டி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் மூத்தோர் தடகள சங்கம் சார்பாக 13-வது வருடம் மூத்தவர்களுக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓட்டப்பந்தய போட்டிகள் நடைபோட்டி, தடை தாண்டி ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தத்தித் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 321 பேர் கலந்து கொண்டார்கள். இப்போட்டி முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்கத் தலைவர் சுந்தரராஜன், செயலாளர் சுப்ரமணியம், விவேகானந்தா சேவா அறக்கட்டளை செயலாளர் ராமசாமி, திருப்பூர் தடகள சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்டத் துணைத் தலைவர் விஸ்வநாதன், பொருளாளர் செல்லமுத்து என பலர் கலந்து கொண்டார்கள்.