ஓசூரில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சிறிய அளவிலான காயங்களுடன் உயிர் தப்பினார்.
அதிஷ்டவசமாக பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மீது லாரி மோததால் பயணிகள் உயிர் தப்பினர். பேருந்து நிறுத்தத்திற்கு 50 அடி தொலைவிற்கு முன்னரே லாரி விபத்துக்குள்ளானதால் இந்த பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.