Categories
திருப்பூர் மாநில செய்திகள்

திருப்பூர் அருகே லாரியும் – பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! – 18 பேர் பலி!

திருப்பூர் மாவட்டத்தில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோரா  விபத்தில் 18 பேர் பலியாகினர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து  திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில், 3 பெண்கள் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |