Categories
மாநில செய்திகள்

திருப்பூர் காப்பகத்தில் உயிரிழந்த 3 சிறுவர்கள்… முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவிப்பு…!!!!!

காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதில் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த காப்பகத்தில் கெட்டுப் போன உணவை சாப்பிட்டதால் காப்பகத்தில் உள்ள 14 குழந்தைகளுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் விவேகானந்தர் சேவாலயத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தியுள்ளார்.

இந்த சூழலில் காப்பகத்தில் உயிரிழந்த மூன்று சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தல 2 லட்சம் நிவாரண உதவியை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இது பற்றி தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் ராக்கிபாளையம் கிராமம் மஜராத் திருமுருகன் பூண்டியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவர்களின் மாதேஷ் (15), பாபு (13), மற்றும் ஆதிஷ்(8) போன்ற மூன்று சிறுவர்களும் காப்பகத்தில் உள்ள உணவை சாப்பிட்டபின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 6.10.2022 அன்று உயிரிழந்திருக்கின்றனர்.

உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் சிகிச்சையில் உள்ள சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்க அறிவுறுத்தி இருக்கிறேன். உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டிருக்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |