Categories
அரசியல் செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக 6 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதய எம்.எல்.ஏ திமுகவின் இதயவர்மன். திருப்போரூர் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,93,251 ஆகும். மாமல்லபுரத்தில் படகுகளை நிறுத்துவதற்காக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது மீனவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பூஞ்சேரி அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். சிற்பத் தொழிலை காக்க அரசே பாறைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டும் என சிற்பிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நீதிமன்றம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்டவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Categories

Tech |