Categories
அரசியல்

திருமங்கலம் பார்முலாவை கையிலெடுக்காங்க…! நியாயம் கிடைக்கணும்…. ஆர்.பி உதயகுமார் குமுறல்…!!!

முன்னாள் அமைச்சர்களான ஆர் பி உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர் பி உதயகுமார், மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தி வெற்றி பெற திமுகவினர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். மதுரையில் உள்ள 16வது மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கு அமைக்கப்பட்டுள்ள 97 வாக்குச்சாவடிகளில் 10 இடங்களில்  மட்டுமே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், மதுரை மாவட்டத்தில் நடைபெறுகிற மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 97 வாக்குச்சாவடிகளில் முழுமையாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்ற செய்தி எங்களுக்கு தெரிந்திருக்கிறது. பத்தோ, பதினொன்றோ என்று சொல்கிறார்கள். திமுவுக்கு ஏற்கனவே, திருமங்கலம் பார்முலா உலகறிந்த பார்முலாவாக இருக்கின்ற காரணத்தினால் பல்வேறு முறைகேடுகளுக்கு அன்றைக்கு திருமங்கலம் பார்முலா அடையாளமாக இருந்தது.

அதை திரும்பவும் இப்பொழுது ஆளும் கட்சியாக இருப்பதால் செயல்படுத்துவதாக தகவல் வந்திருப்பதால் நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம். எங்களுடைய கோரிக்கை என்னவென்றால் ஜனநாயக முறைப்படி மாண்புமிகு நீதிமன்றமும், மாண்புமிகு நீதியரசர்களும் வகுத்து கொடுத்திருக்கும் வழிமுறைகளின்படி தேர்தலை முழுமையாக ஜனநாயக முறையில் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |