திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது
திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வு. அதனை அவ்வப்போது பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த காணொளியாகவும் புகைப்படங்களாகவும் சேகரித்து வைப்பது வழக்கம். அண்மைக்காலமாக திருமணத்திற்கு முன்பும் திருமணம் முடிந்த பிறகும் விதவிதமாக போட்டோ ஷூட் எடுக்கப்படுகின்றது. அதிலும் தீம்கள் அடிப்படையில் அந்த போட்டோ ஷூட் எடுக்கப்படுகிறது. மாடர்னாகவும் கிளாமராகவும் ஆபத்து நிறைந்ததாகவும் போட்டோஷூட் எடுக்கப்படுவதால் தேவையற்றது என கருதத் தோன்றுகிறது.
ஆனால் சமீபத்தில் திருமணம் முடிந்த கேரளாவை சேர்ந்த தம்பதி ஒன்று தங்கள் திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் டை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். உழைப்பவர்களையும் ஆண் பெண் இருவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்பதையும் மையப்படுத்தி இந்த தம்பதியினர் போட்டோஷூட் எடுத்துள்ளனர். இணையதளத்தில் வைரலாக பரவிவரும் இந்த போட்டோ ஷூட் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.