கள்ளக்காதல் ஜோடியை, உறவினர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாயினார் கோவிலுக்கு அருகிலுள்ள மனச்சனேந்தல் கிராமத்தை சேர்ந்த 30 வயதுடைய சத்தியேந்திரன் என்பவருக்கும் சிவகங்கை மாவட்டத்தில் மானா மதுரைக்கு அருகிலுள்ள கிளாங்காட்டூர் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய வளர்மதிக்கும், 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நிவேதா (6 வயது) மகள் மற்றும் ஆகாஷ் (3வயது) மகன் உள்ளனர். கணவன் சத்தியேந்திரன் திருச்சியில் சின்ன கடை வீதி பகுதியில், டீக்கடையில் வேலை பார்க்கிறார்.
கிடைக்கும் நேரத்தில் தன் மனைவி மற்றும் குழந்தைகளை காண ஊருக்கு வந்து செல்வார். இவ்வாறு கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி ஊருக்கு வரும்போது , அவர் மனைவி காணவில்லை. சத்தியேந்திரன் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் மனைவி வளர்மதிக்கும், மனச்சனேந்தல் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய வேல்ராஜ் என்ற இளைஞருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் இருவரும் ஊரை விட்டு ஓடி ,திருச்சியில் தாரநல்லூர் இடத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.
அவர்கள் இருவரும் திருச்சியில் இருப்பதை தெரிந்து, சத்தியேந்திரன் மற்றும் அவரது தம்பி பிரபு, ராசையா மற்றும் உறவினர்களான காட்டுராஜா, தனசேகர் ஆகியோருடன் திருச்சி சென்று, வேல்ராஜை தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த வேல்ராஜ், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி வளர்மதியை வலுக்கட்டாயமாக சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். இது கொலை வழக்காக மாறியதால் திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் கணவன் சத்தியேந்திரன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதற்கு காரணமான வளர்மதியின் மீது ஆத்திரமடைந்த அவரது உறவினர்களான காட்ட ராஜா மற்றும் தனசேகர் வளர்மதியை அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டான சுந்தரமாணிக்கம் மற்றும் அவருடன் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து , வளர்மதியின் உடலை எடுத்துக் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.