Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“திருமணத்திற்குப் பின் பிரஸ்மீட் வைத்த நயன்-விக்கி”…. என்ன பேசுனாங்க தெரியுமா…????

திருமணத்திற்கு பிறகு நயனும் விக்கியும் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தி உள்ளனர்.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நேற்று முன் தினம் காலை 10.25 மணிக்கு நடைபெற்றது.

இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் பாதுகாப்பில் நடைபெற்றுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் திரைப்பட பிரபலங்களான சாருக்கான், ரஜினிகாந்த், மணிரத்னம், கார்த்தி, போனி கபூர், ராதிகா சரத்குமார், இயக்குனர் விஜய், அட்லீ என பலர் கலந்து கொண்டார்கள். திருமணம் முடிந்த பிறகு நேற்று நயனும் விக்கியும் திருப்பதி சென்றார்கள்.

இந்த நிலையில் இன்று பிரஸ்மீட் வைத்தனர். பிரஸ் மீட்டானது சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் தாஜ் க்ளப் ஹோட்டலில் நடந்தது. முதலில் நயன்தாரா பேசிய பொழுது கூறியதாவது, பிரஸ்மீட்டிற்கு வந்ததற்கு நன்றி. இவ்வளவு நாள் நீங்கள் கொடுத்த ஆதரவு பெரியது. இப்போ எங்களுக்கு திருமணமாகி விட்டது. இனி மேலும் உங்களின் ஆதரவும் ஆசிர்வாதமும் வேண்டும் எனக்கூறி நன்றி சொன்னார்.

இதையடுத்து பேசிய விக்னேஷ் சிவன் இந்த ஹோட்டலில் தான் நயன்தாராவை முதன் முதலில் கதை சொல்வதற்காக சந்தித்தேன். தற்போது இங்கேயே பிரஸ்மீட் கொடுக்கின்றோம் என கூறினார். பின் பத்திரிக்கையாளர்களை சாப்பிட்டீங்களா? என கேட்டார். இதையடுத்து எங்களின் திருமணத்திற்கு உங்களின் ஆசீர்வாதம் தேவை. எங்களுடைய புரோபஷனல் கெரியருக்கும் உங்களுடைய ஆசீர்வாதமும் ஆதரவும் தேவை என கூறினார்.

Categories

Tech |