ஒரு மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்த பிறகும் அவரின் தோற்றத்தை வைத்து திட்டிக் கொண்டே இருந்ததால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மும்பையின் கிராண்ட் ரோட்டில் வசிக்கும் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண் கருப்பாக இருப்பதால் எப்போதும் அவரது கணவர் அவரின் தோற்றத்தில் குறித்து திட்டிக் கொண்டே இருந்துள்ளார். தனது காதலி மிகவும் அழகாக இருப்பதாகவும், நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று கேலி செய்து வந்துள்ளார்.
கேவலமாக இருப்பதால் அதற்கான பணத்தை வரதட்சனை கொடுக்க வேண்டும் என்றும் அந்த பெண்ணை கொடுமைப்படுத்திய உள்ளார். இது ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்காத அந்த பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் குடும்பத்தினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.