Categories
உலக செய்திகள்

திருமணத்திற்கும் தடை… திருவிழாவிற்கும் தடை… அதிரடி தடை விதித்த நாடு..!!

தொற்று அதிகரித்து வருவதால் ஈரானில் திருமணம் திருவிழா போன்றவைகளுக்கு தடைவிதித்து அதிபர் உத்தரவிட்டுள்ளார்

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புரட்சியினால் 2,397 பேர் பாதிக்கப்பட்டு அங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 12,500 உரை தாண்டிச் சென்றுள்ளது. இந்நிலையில் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக அந்நாட்டு அதிபர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெரிய நிகழ்வுகள் அனைத்திற்கும் நாடு முழுவதும் தடை விதிக்கிறோம்.

அது திருமணமானாலும் சரி, திருவிழாவாக இருந்தாலும் சரி கொண்டாட்டத்திற்கான நேரம் இதில் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக முக கவசம் அணியாத ஈரானியர்கள் அரசு வழங்கும் சேவைகள் அனைத்தும் மறுக்கப்படும் என்றும் சரியாக சமூக இடைவெளியை பின்பற்றாத நிறுவனங்கள் ஒரு வாரம் மூடப்பட்டு சீல் வைக்கப்படும் என்றும் அதிபர் ஹசன் அறிவித்திருந்தார்.

ஈரான் நாட்டின் புனித நகரான கூலிமில் முதல் கொரோனா பிப்ரவரி மாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சுற்றுலா நகரமான கிலானில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வகையில் தற்போது ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் தாக்கம் அதிகரித்து வருகின்றது. 90 லட்சம் பேர் வசிக்கும் தலைநகரில் 20 சதவீதம் பேருக்கு தோற்று பாதித்திருக்கும் என கூறப்படுகின்றது. இவ்வாறு தொற்று அதிகரித்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்படும்  என எச்சரிக்கப்பட்டுள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |