பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ப.எடகுப்பம் கிராமத்தில் செங்குட்டுவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசவுந்தர்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சவுந்தர்யா கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சவுந்தர்யாவும் அதே பகுதியை சேர்ந்த அருண்துரை என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த அருண்துரை குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதிக்காததால் மன உளைச்சலில் இருந்த அருண்துரை மற்றும் சவுந்தர்யா தற்கொலை செய்ய முடிவு செய்ததாகவும், ஆனால் சவுந்தர்யா மட்டும் தற்கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அருண்துரை, அவரது தந்தை முருகானந்தம், தாய் நதியா, நவீன்ராஜ், தர்மதுரை, பாண்டியன் ஆகிய 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.