உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் புறநகர் பகுதியான பாந்த்ராவில் ஏழு வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் திருமணத்திற்கு வந்துள்ளார். பெற்றோர் திருமண வேலைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அதே திருமணத்திற்கு டிஜே நிகழ்ச்சிக்கு வந்த அனுஜ் ராவத் மற்றும் ராமேஷ்வர் என்ற இரு இளைஞர்கள் சிறுமியை கடத்திச் சென்றனர். சிறுமியை புதருக்குள் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியபோது, புதருக்குள் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது, ராமேஸ்வர் என்பவன் தப்பி ஓடிவிட்டான். தொடர்ந்து, அனுஜை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.