நெற்குன்றம் அருகே பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுர் மாவட்டம் நெற்குன்றம் சக்தி நகரில் வசித்து வருபவர் காளிதாஸ். இவருக்கு 16 வயதில் அஜய் என்ற மகன் இருக்கிறான். இவர் அங்கு இருக்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அஜயின் அப்பா – அம்மா இருவரும் நேற்று முன்தினம் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் அஜய் மற்றும் அவருடைய அண்ணன் இருவரும் இருந்துள்ளனர். மூத்த மகன் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் மூத்த மகன் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது தம்பி அஜய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.