விஷ்ணு விஷாலின் காதலி ஜுவாலா கட்டா சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது . இவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சிலுக்குவார் பட்டி சிங்கம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார் . தற்போது நடிகர் விஷ்ணு விஷால் எஃப் ஐ ஆர், ஜெகஜாலக்கில்லாடி, மோகன்தாஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் . மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள காடன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் திருமணத்திற்கு தயாராகிவரும் ஜுவாலா கட்டா தனது தோழிகளுடன் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்