எகிப்திய நாட்டில் இரண்டாவது திருமணம் செய்வதற்காக முதல் குடும்பத்தை வீட்டுடன் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்தில் உள்ள நபர் ஒருவர் திருமணமான பிறகு வேறொரு பெண்ணோடு தொடர்பில் இருந்துள்ளார். அந்த பெண் தனது கணவரை விவாகரத்து செய்து பின்னர் இவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த நபர் தனது முதல் குடும்பத்தை கொலை செய்து பின்னர்காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை தொடங்கிய போது, தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்வதற்காக வீட்டில் இருந்த தாய், மனைவி, 3 மகள்களை கொலை செய்தும் நான்காவது மகளையும் கழுத்தை நெறிக்க அவர் மயக்கமடைந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக கருதி,வீட்டில் கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு எரித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
ஆனால் மயக்க நிலையில் இருந்த 4-வது மகள்வீட்டில் இருந்து தப்பி ஓடி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தான் குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இரண்டாவது திருமணம் செய்ய தனது முதல் குடும்பத்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நபரை கைது செய்த காவல்துறையினர் எத்தகைய தகவலையும் வெளியிடவில்லை. கைது செய்யப்பட்ட நபரை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இத்தகைய சம்பவத்தில் அவர் திருமணம் செய்ய திட்டமிட்ட பெண்ணுடைய தூண்டுதல் இருக்கின்றதா? என விசாரணையில் தெரிய வரும் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.