திருமணத்திற்கு பின் நயன்தாரா தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. எனவே ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் நயன்தாரா. அதன்படி விக்கி -நயன் இருவரின் திருமணமும் கடந்த ஜூன் 09ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் தங்களுடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய நடிகர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விக்னேஷ் சிவனுக்கு தாலி எடுத்துக் கொடுக்க திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்த வருகின்றார் நயன்தாரா. இப்பொழுது ஷாருக்கானுடன் உடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு 7 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கி இருக்கலாம் என சொல்லப்படுகின்றது. இதையடுத்து தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றார். இத்திரைப்படத்திற்கு அன்னபூரணி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் திரைப்படத்திற்கு 10 கோடி வரை நயன்தாரா சம்பளமாக கேட்டதற்கு தயாரிப்பாளரும் சம்மதம் தெரிவித்ததாக செய்தி வெளியாகி இருக்கிறது.