Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு மறுத்த காதலன்….. காதலி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

காதல் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடராஜனும், ரம்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்ய நடராஜன் மறுப்பு தெரிவித்ததால் ரம்யா ஜெயம் கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று அவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி புகார் அளித்தார்.

இதனால் போலீசார் இரு விட்டாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து போலீசார் ஜெயம்கொண்டதில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்து விட்டு காவல் நிலையத்திற்கு திரும்பி வந்தனர். பின்னர் அறிவுரை கூறிய இருவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |