Categories
தேசிய செய்திகள்

“திருமணத்திற்கு மறுப்பு” நடிகைக்கு கத்தி குத்து… தயாரிப்பாளர் மீது புகார்…!!!

தயாரிப்பாளரை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த தொலைக்காட்சி நடிகை மல்கோத்ரா  கத்தியால் குத்தி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை மால்வி மல்கோத்ரா அந்தேரியின் வெர்சோவா பகுதியிலுள்ள ஒரு ஓட்டலில் இருந்து நேற்று இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை சந்தித்த தயாரிப்பாளர் யோகேஷ் மகிபால் சிங் தன்னை திருமணம் செய்யயுமாறு வற்புறுத்திய போது நடிகை மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த மகிபால் சிங் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தி உள்ளார். இதனையடுத்து பலத்த காயம் அடைந்த நடிகை மல்கோத்ரா சிகிச்சைக்காக மும்பையின் கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தயாரிப்பாளர் மகிபால் சிங்கும் நடிகை மல்கோத்ராவும் 2019 ஆம் ஆண்டு சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் தயாரிப்பாளர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மல்கோத்ராவிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். தற்போது தயாரிப்பாளருடனான அனைத்து வகையான தகவல்தொடர்புகளையும் நடிகை துண்டித்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக மகிபால் சிங் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |