பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கும், நடிகர் ரன்பீர் கபூருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதாக ஜூன் 27ம் தேதி சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தார். இது குறித்து பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் போன ராக்கி சாவந்திடம் கேட்கப்பட்டது. தன் காதலரான ஆதிலுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது ராக்கியிடம் செய்தியாளர்கள் இந்த கேள்வியை எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த ராக்கி, நான் எப்பொழுது கர்ப்பமாவேன்? திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாலும் எனக்கு கவலை இல்லை. நான் கர்ப்பமான மறுநாளே திருமணம் செய்து கொள்வேன். அனைத்தையும் சரியாக்கும் ஒரு நல்ல பிள்ளையை பெற்றெடுப்பேன் என்றார். வழக்கம் போல், ராக்கி இந்த செய்தியை டிரெண்டாக்கும் வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டதாக வலைத்தளத்தில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.